எங்களுடைய மரணம் மூலம் நாம் ஓய்வு பெறுகின்றோமா? அல்லது ஏனைய மனிதர்கள், நகரங்கள், மரங்கள் மற்றும் கால்நடைகள் ஓய்வு பெறுகின்றனவா?

Category Lectures and Advices
Lesson ▪️ எங்களுடைய மரணம் மூலம் நாம் ஓய்வு பெறுகின்றோமா? அல்லது ஏனைய மனிதர்கள், நகரங்கள், மரங்கள் மற்றும் கால்நடைகள் ஓய்வு பெறுகின்றனவா?▪️

📚ஹதீஸ் விளக்கம்:

عَنْ أَبِي قَتَادَةَ بْنِ رِبْعِيٍّ الأَنْصَارِيِّ، أَنَّهُ كَانَ يُحَدِّثُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم مُرَّ عَلَيْهِ بِجِنَازَةٍ فَقَالَ ‏”‏ مُسْتَرِيحٌ، وَمُسْتَرَاحٌ مِنْهُ ‏”‌‏.‏ قَالُوا يَا رَسُولَ اللَّهِ مَا الْمُسْتَرِيحُ وَالْمُسْتَرَاحُ مِنْهُ قَالَ ‏”‏ الْعَبْدُ الْمُؤْمِنُ يَسْتَرِيحُ مِنْ نَصَبِ الدُّنْيَا وَأَذَاهَا إِلَى رَحْمَةِ اللَّهِ، وَالْعَبْدُ الْفَاجِرُ يَسْتَرِيحُ مِنْهُ الْعِبَادُ وَالْبِلاَدُ وَالشَّجَرُ وَالدَّوَابُّ ‏”‌‏.‏

அபூ கத்தாதா இப்னு ரிப்ஈ அல்அன்சாரி رضي الله عنه அறிவித்தார்; இறைத்தூதர் ﷺ அவர்களைக் கடந்து ஒரு ஜனாஸா (பிரேதம்) கொண்டு செல்லப்பட்டது. அப்போது அவர்கள் ‘(இவர்) ஓய்வு பெற்றவராவார்; அல்லது (பிறருக்கு) ஓய்வு அளித்தவராவார்’ என்றார்கள். மக்கள் ‘இறைத்தூதர் அவர்களே! ஓய்வு பெற்றவர்; அல்லது ஓய்வு அளித்தவர் என்றால் என்ன?’ என்று கேட்டார்கள். நபி ﷺ அவர்கள் ‘இறை நம்பிக்கை கொண்ட அடியார் (இறக்கும் போது) இவ்வுலகத்தின் துன்பத்திலிருந்தும் தொல்லையிலிருந்தும் ஓய்வுபெற்று இறையருளை நோக்கிச் செல்கிறார். பாவியான அடியான் (இறக்கும்போது) அவனி(ன் தொல்லைகளி)டமிருந்து மற்ற அடியார்கள், (நாடு) நகரங்கள், மரங்கள் மற்றும் கால்நடைகள் ஆகியன ஓய்வு (பெற்று நிம்மதி) பெறுகின்றன’ என்றார்கள். (ஸஹீஹ் அல்-புகாரி)

🎤
விளக்க உரை: அஷ்-ஷெய்க் அபூ அப்திர்-ரஹ்மான் நவ்வாஸ் அல்-ஹிந்தி அஸ்-ஸெய்லானி ஹபிழஹுல்லாஹ்.

Part 01 lesson

Duties towards parents after their death

Category Lectures and Advices
Lesson ▪️ஒரு மனிதன் மரணித்துவிட்டால் தொடர்ந்தும் அவரது கப்ரரையைச் சென்றடையும் நன்மைகள் ▪️

📌 ஒரு மனிதனின் மௌத்திற்கு (மரணத்திற்கு) பின்னரும் அவனுடைய கப்ருக்கு கூலிகள் வந்து கொண்டிருக்குமா?

📌ஒரு மனிதனின் திடீர் இறப்பால் அவர் செய்ய நாடிய நல்ல காரியங்களை செய்ய முடியாமல் போயிருக்கலாம். அவ்வாறு அவர் செய்ய நாடிய நல்ல காரியங்களை பிள்ளைகள் செய்யலாமா? அவ்வாறு அவர்கள் செய்தால் அது அவர்களை (மரணித்தவர்களை) சென்றடையுமா?

📌 மரணித்த பெற்றோர்களுக்காக பிள்ளைகள் தர்மம் செய்ய முடியுமா அதன் கூலிகள் அவர்களைச் சென்றடையுமா?

📌 ஒரு மையித்துக்கு பயந்தரக்கூடிய அம்சங்கள் என்ன?

Part 01 lesson

▪️Explanation of Hadith of Fitan – குழப்பங்கள் நிறைந்த காலமும் இவ்வுலகின் அற்ப சுகங்களுக்காக விற்கப்படும் மார்க்கமும்.▪️

Category Lectures and Advices
Lesson ▪️Explanation of Hadith of Fitan – குழப்பங்கள் நிறைந்த காலமும் இவ்வுலகின் அற்ப சுகங்களுக்காக விற்கப்படும் மார்க்கமும்.▪️

ஹதீஸ் விளக்கம்:

عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللّهِ صلى الله عليه وسلم قَالَ: ⟪بَادِرُوا بِالأَعْمَالِ فِتَنا كَقِطَعِ اللَّيْلِ الْمُظْلِمِ. يُصْبِحُ الرَّجُلُ فِيْهَا مُؤْمِناً وَيُمْسِي كَافِراً. أَوْ يُمْسِي مُؤْمِناً وَيُصْبِحُ كَافِراً. يَبِيعُ دِينَهُ بِعَرَضٍ مِنَ الدُّنْيَا⟪. ‏(‌‏(‏رواه مسلم‏)‌‏)‌‏.‏

📚
அபூஹுரைரா رضي الله عنه அவர்கள் அறிவிக்கிறார்கள்; அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள்:

இருள் மிகுந்த இரவின் பகுதிகளைப் போன்ற குழப்பங்கள் தோன்றுவதற்கு முன் விரைந்து (நற்)செயல்கள் புரிந்துகொள்ளுங்கள். (அக்குழப்பங்களின்போது) காலையில் இறை நம்பிக்கையாளனாக இருக்கும் ஒரு மனிதன் மாலையில் இறைமறுப்பாளனாக மாறிவிடுவான். மாலையில் இறைநம்பிக்கையாளனாக இருக்கும் ஒருவன் காலையில் இறைமறுப்பாளனாக மாறிவிடுவான். இவ்வுலகின் அற்ப சுகங்களுக்காகத் தனது மார்க்கத்தையே அவன் விற்றுவிடுவான். (ஸஹீஹ் முஸ்லிம்)

Part 01 lesson

காபிர்களுக்கு முறணாக நடந்துகொள்வதில் ஒரு முஸ்லிமுக்கு உள்ள கடமைகளும் அதற்கான ஆதாரங்களும்.

Category Lectures and Advices
Lesson ▪️காபிர்களுக்கு முறணாக நடந்துகொள்வதில் ஒரு முஸ்லிமுக்கு உள்ள கடமைகளும் அதற்கான ஆதாரங்களும். – 01&02▪️

ஒரு முஸ்லிம், அல்லாஹ் லஃனத் செய்த-சபித்த யூத சமூகத்தைச் சேர்ந்தவனாக இருக்கக்கூடாது; அல்லாஹ் லஃனத் செய்த-சபித்த கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்தவனாக இருக்கக்கூடாது; அல்லாஹ் லஃனத் செய்த-சபித்த முஷ்ரிக்களுடைய சமூகத்தைச் சேர்ந்தவனாக இருக்கக்கூடாது.

யூதர்கள் கூறினார்கள்; நம்முடைய காரியங்களில் எந்தவொன்றுக்கும் மாறு செய்யாமல் விடக்கூடாது என்பதே இந்த மனிதரது (நபி ﷺ அவர்களின்) விருப்பமாகும்.

அல்லாஹ்வுக்கு வழிப்பட்டு ரஸூல்மார்கள், ஸகாபாக்கள், ஸலபுஸ்ஸாலிஹீன்களின் வழிமுறையை பின்பற்றுவதன் அவசியத்தையும்; காபிர்கள், வழிகேடர்கள், குற்றவாழிகளின் வழிமுறையை புறக்கணித்து நடப்பதன் அவசியத்தையும் இன்-ஷா அல்லாஹ் இந்த உரையைச் செவிமடுத்து ஆதாரங்களுடன் கற்றுக்கொள்வோம்!

Part 02 lessons

Specialties of Fasting

Category Lectures and Advices
Lesson Specialties of Fasting
Details ▪️Ramadan-நோன்பின் சிறப்புக்கள் ▪️
🍃எவரெல்லாம் சொர்க்கத்தை அடைய ஆசைப்படுகின்றார்களோ! அவர்கள் நோன்பிருக்கட்டும்.🍃

📌நோன்புக்கு நிகராக எதுவும் இல்லை.

📌நோன்பு அல்லாஹ்வுக்குரியது.

📌நோன்பு தகாத பார்வையைக் கட்டுப்படுத்தி கற்பைக் காக்கும்.

📌நோன்பாளிகளுக்கு சொர்க்கத்தில் ரையான் எனும் ஒரு வாயில்.

📌நோன்பு பாவங்களுக்கு பரிகாரமாகும்.

📌நோன்பு ஓர் கேடயமாகும்.

📌நோன்பு நரக வேதனையில் இருந்து தூரமாக்கும்.

📌ரமழான் மாதத்தில் நோன்பு பிடிப்பதன் சிறப்பு.