Category | Lectures and Advices |
Lesson | بسم الله الرحمن الرحيم
عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتِ اسْتَأْذَنَ رَهْطٌ مِنَ الْيَهُودِ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالُوا السَّامُ عَلَيْكَ. فَقُلْتُ بَلْ عَلَيْكُمُ السَّامُ وَاللَّعْنَةُ. فَقَالَ “” يَا عَائِشَةُ إِنَّ اللَّهَ رَفِيقٌ يُحِبُّ الرِّفْقَ فِي الأَمْرِ كُلِّهِ “”. قُلْتُ أَوَلَمْ تَسْمَعْ مَا قَالُوا قَالَ “” قُلْتُ وَعَلَيْكُمْ “”.
யூதர்களில் ஒரு குழுவினர் நபி ﷺ அவர்களிடம் வந்து அனுமதி கேட்டு “அஸ்ஸாமு அலைக்க“ (உமக்கு மரணம் உண்டாகட்டும்) என்று (சற்றே மாற்றி சாபமிட்டு முகமன்) கூறினர். உடனே நான் “வ அலைக்கும் அஸ்ஸாமு வல்லஅனா“ அவ்வாறே உங்களுக்கு மரணமும் சாபமும் ஏற்படட்டும்) என்று பதில் (முகமன்) சொன்னேன். அப்போது இறைத்தூதர் ﷺ அவர்கள் “ஆயிஷா! (நிதானம்!) அல்லாஹ் நளினமானவன். எல்லாக் காரியங்களிலும் நளினத்தைக் கையாள்வதையே அவன் விரும்புகிறான்“ என்று கூறினார்கள். நான் “அவர்கள் சொன்னதை நீங்கள் செவியேற்கவில்லையா?“ என்று கேட்டேன். நபி ﷺ அவர்கள், “நானே “வ அலைக்கும்“ (அவ்வாறே உங்களுக்கு உண்டாகட்டும்) என்று (நளினமாகச்) சொல்லி விட்டேனே (அதை நீ கவனிக்கவில்லையா?)“ என்று (திருப்பிக்) கேட்டார்கள். (ஸஹீஹ் புகாரி) قَالَ “” مَهْلاً يَا عَائِشَةُ، عَلَيْكِ بِالرِّفْقِ، وَإِيَّاكِ وَالْعُنْفَ وَالْفُحْشَ “”. قَالَتْ أَوَلَمْ تَسْمَعْ مَا قَالُوا قَالَ “” أَوَلَمْ تَسْمَعِي مَا قُلْتُ رَدَدْتُ عَلَيْهِمْ، فَيُسْتَجَابُ لِي فِيهِمْ، وَلاَ يُسْتَجَابُ لَهُمْ فِيَّ “”.
|
Part | 01 lesson |
