Allah is kind and lenient and likes that one should be kind and lenient in all matters

Category Lectures and Advices
Lesson بسم الله الرحمن الرحيم

▪️அல்லாஹ் நளினமானவன் அவன் எல்லாக் காரியங்களிலும் நளினத்தையே விரும்புகின்றான்.▪️

🍃ஹதீஸ் விளக்கம்:🍃

عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتِ اسْتَأْذَنَ رَهْطٌ مِنَ الْيَهُودِ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالُوا السَّامُ عَلَيْكَ. فَقُلْتُ بَلْ عَلَيْكُمُ السَّامُ وَاللَّعْنَةُ. فَقَالَ “” يَا عَائِشَةُ إِنَّ اللَّهَ رَفِيقٌ يُحِبُّ الرِّفْقَ فِي الأَمْرِ كُلِّهِ “”. قُلْتُ أَوَلَمْ تَسْمَعْ مَا قَالُوا قَالَ “” قُلْتُ وَعَلَيْكُمْ “”.

📚
ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹு அறிவித்தார்கள்;

யூதர்களில் ஒரு குழுவினர் நபி ﷺ அவர்களிடம் வந்து அனுமதி கேட்டு “அஸ்ஸாமு அலைக்க“ (உமக்கு மரணம் உண்டாகட்டும்) என்று (சற்றே மாற்றி சாபமிட்டு முகமன்) கூறினர். உடனே நான் “வ அலைக்கும் அஸ்ஸாமு வல்லஅனா“ அவ்வாறே உங்களுக்கு மரணமும் சாபமும் ஏற்படட்டும்) என்று பதில் (முகமன்) சொன்னேன். அப்போது இறைத்தூதர் ﷺ அவர்கள் “ஆயிஷா! (நிதானம்!) அல்லாஹ் நளினமானவன். எல்லாக் காரியங்களிலும் நளினத்தைக் கையாள்வதையே அவன் விரும்புகிறான்“ என்று கூறினார்கள். நான் “அவர்கள் சொன்னதை நீங்கள் செவியேற்கவில்லையா?“ என்று கேட்டேன். நபி ﷺ அவர்கள், “நானே “வ அலைக்கும்“ (அவ்வாறே உங்களுக்கு உண்டாகட்டும்) என்று (நளினமாகச்) சொல்லி விட்டேனே (அதை நீ கவனிக்கவில்லையா?)“ என்று (திருப்பிக்) கேட்டார்கள். (ஸஹீஹ் புகாரி)

قَالَ “” مَهْلاً يَا عَائِشَةُ، عَلَيْكِ بِالرِّفْقِ، وَإِيَّاكِ وَالْعُنْفَ وَالْفُحْشَ “”. قَالَتْ أَوَلَمْ تَسْمَعْ مَا قَالُوا قَالَ “” أَوَلَمْ تَسْمَعِي مَا قُلْتُ رَدَدْتُ عَلَيْهِمْ، فَيُسْتَجَابُ لِي فِيهِمْ، وَلاَ يُسْتَجَابُ لَهُمْ فِيَّ “”.

📚
‘ஆயிஷா! நிதானம்! (எதிலும்) நளினமாக நடந்துகொள். மேலும், வன்மையுடன் நடந்துகொள்வதிலிருந்தும் அருவருப்பாகப் பேசுவதிலிருந்தும் உன்னை எச்சரிக்கிறேன்’ என்று கூறினார்கள். (ஸஹீஹ் புகாரி)

🎤
விளக்க உரை: அஷ்-ஷெய்க் அபூ அப்திர்-ரஹ்மான் நவ்வாஸ் அல்-ஹிந்தி அஸ்-ஸெய்லானி ஹபிழஹுல்லாஹ்.

🎧
இன்-ஷா அல்லாஹ்! இந்த ஹதீஸின் தெளிவுரையை செவிமடுத்து, நளினம் பற்றிய பாடத்தை ஆதாரங்களுடன் கற்றுக் கொள்வோம்! நற் செயல்களின் பால் முந்திக்கொள்வோம்!

Part 01 lesson

The Blessed month of Ramadan has arrived

Category Lectures and Advices
Lesson ▪️ மக்களே! பரகத் (அருள்) செய்யப்பட்ட ரமழான் மாதம் வந்து விட்டது. அந்த பரகத்தை பெற்றுத்தரும் வழிகளை அறிந்து கொள்வோம்!▪️

பரகத் (அருள்) செய்யப்பட்ட மாதம் உங்களிடம் வந்து விட்டது. அம்மாதத்தில் நோன்பு நோற்பதை அல்லாஹ் உங்களுக்கு கடமையாக்கியுள்ளான். அம்மாதத்தில் சொர்க்கத்தின் வாயில்கள் திறக்கப்படுகின்றன. நரகத்தின் வாயில்கள் அடைக்கப்படுகின்றன. அம்மாதத்தில் ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர். அம்மாதத்தில் ஓர் இரவு உண்டு. அது ஆயிரம் மாதங்களை விட சிறந்தது. அந்த இரவில் பாக்கியம் பெறாதவர் ஒட்டு மொத்த பாக்கியத்தையும் இழந்தவராவார். (அஹ்மத் – இந்த ஹதீஸ் ஏனைய அறிவிப்புக்கள் மூலம் இன்-ஷா அல்லாஹ்! உறுதி பெறுகிறது.)

📌ரமழான் மாதத்தில் நோன்பு நோற்றல்

📌ரமழான் மாதத்தில் கியாமுல் லைல் தொழுகை

📌அல்-குர்ஆன் ஓதுதல்

📌அதிகமாக தர்மம் செய்தல்

📌முடியுமானவர்கள் உம்ரா செய்தல்

📌நோன்பு நோற்ற நிலையில் துஆச் செய்தல்

📌முடியுமானவர்கள் இஃதிகாப் இருத்தல்

🎧

Part 01 lesson

அல்லாஹ்வினால் நன்றி செலுத்தப்பட்ட முயற்சிகளும் (நற்செயல்கள்) அவைகளின் மூன்று நிபந்தனைகளும்

Category Lectures and Advices
Lesson ▪️ அல்லாஹ்வினால் நன்றி செலுத்தப்பட்ட முயற்சிகளும் (நற்செயல்கள்) அவைகளின் மூன்று நிபந்தனைகளும்▪️
اِنَّ هٰذَا كَانَ لَـكُمْ جَزَآءً وَّكَانَ سَعْيُكُمْ مَّشْكُوْرًا

நிச்சயமாக இது உங்களுக்குக் கூலியாக இருக்கும்; உங்களுடைய முயற்சியும் நன்றிக்குரியதாகி (அங்கீகரிக்கப்பட்டு) விட்டது” என்று கூறுவான். (ஸூரத்துல் இன்ஸான்: 22)

📌
நாங்கள் புத்திசாலிகளாக இந்த உலக வாழ்க்கையில் சிந்திக்க வேண்டும். அல்லாஹ்வை நாம் சந்திக்கும்போது எங்களுடைய உலக வாழ்க்கை எவ்வாறு அமையப்போகிறது? எங்களுடைய செயல்கள் அல்லாஹ்வினால் நன்றி செலுத்தப்படக்கூடியதாக இருக்குமா? இல்லாவிட்டால் அல்லாஹ் எங்களைப் புறக்கணித்த நிலையில் நாம் அவனை சந்திக்கப் போகிறோமா?

Part 01 lesson

அபூ பக்ர், உமர், உம்மு அய்மன் ( رضي الله عنهم ) அவர்களின் சந்திப்பும்; அதிலிருந்து கிடைக்கும் படிப்பினைகளும்

Category Lectures and Advices
Lesson ▪️ அபூ பக்ர், உமர், உம்மு அய்மன் ( رضي الله عنهم ) அவர்களின் சந்திப்பும்; அதிலிருந்து கிடைக்கும் படிப்பினைகளும்▪️

🍃
நபி ﷺ அவர்களின் மரணத்திற்கு பின் வஹி துண்டிக்கப்பட்டுவிட்டது. வஹி துண்டிக்கப்பட்டதால் அறிவு துண்டிக்கப்பட்டுவிட்டது. அறிவு துண்டிக்கப்பட்டதால் ஸஹாபாக்கள் கவலைப்பட்டு கண்ணீர் சிந்தினார்கள்.

• நபி ﷺ அவர்களின் மரணமும் ஸஹாபாக்களின் பொறுமையும்.

• ஒரு நண்பன் இன்னும் ஒரு நண்பனை நலவின் பால் உற்சாகப்படுத்தல்.

• நபி ﷺ அவர்களின் ஸுன்னாவைப் பின்பற்றுவதும்; முஸ்லிம்களை ஸியாரத் செய்வதும்.

• நபி ﷺ அவர்களின் மரணமும் வஹியின் துண்டிப்பும்.

இன்-ஷா அல்லாஹ்! இந்த சிறப்பான ஸஹாபாக்களின் சந்திப்பில் உள்ள படிப்பினைகளை அறிந்துகொள்வோம்!

அந்த சிறப்பான படிப்பினைகள எம் வாழ்விலும் எடுத்து நடப்போம்!

நாம் படித்து செயல்படுத்திய அந்த சிறப்பான படிப்பினைகளை எங்கள் குடும்பத்திற்கும், நண்பர்களுக்கும் ஏனைய முஸ்லிம்களுக்கும் எத்தி வைப்போம்!

🎤

Part 01 lesson

Tha Man who killed 99 people

Category Lectures and Advices
Lesson ▪️99 மனிதர்களைக் கொலை செய்த மனிதனும், தவ்பாவும், ஸாலிஹான பூமியை நோக்கிய பயணமும்.▪️

📚ஹதீஸ் விளக்கம்:

இமாம் முஸ்லிம் ரஹிமஹுல்லா அவர்களின் ஸஹீஹில் பதிவாகியுள்ள “99 மனிதர்களைக் கொலை செய்த மனிதன்….” என்று ஆரம்பிக்கும் பிரபல்யமான ஹதீஸ்

🎤
விளக்க உரை:
அபூ அப்திர்-ரஹ்மான் நவ்வாஸ் அல்-ஹிந்தி அஸ்-ஸெய்லானி.

📌
“நான் நூறு கொலைகள் செய்துவிட்டேன். எனக்குப் பாவமன்னிப்புக் கிடைக்குமா?” என்று கேட்டார். அதற்கு அந்த அறிஞர், “ஆம் (கிடைக்கும்). இறைவனுக்கும் பாவமன்னிப்புக் கோரிக்கைக்கும் இடையே யார் குறுக்கே வந்து நிற்க முடியும்? நீ (நல்லோர் வாழும்) இன்ன ஊருக்குப் போ. அங்கு மக்கள் சிலர் இருப்பார்கள். அவர்கள் இறைவனை வழிபட்டுக் கொண்டிருப்பார்கள். அவர்களுடன் சேர்ந்து நீயும் இறைவனை வழிபடு. நீ உனது ஊருக்குத் திரும்பிச் செல்லாதே! ஏனெனில், அது தீய ஊராகும்”.

▣ ஒரு வணக்கசாலியின் பத்வாவும் அதன் விபரீதங்களும்.

▣ ஒரு ஆலிமின் பத்வாவும் அவரின் வழிகாட்டல்களும்.

▣ தௌபாவும் அதன் நிபந்தனைகளும்.

▣ ஒரு ஸலிஹான பூமியில் சென்று வாழ்வதும் கெட்ட பூமியில் இருந்து ஒதுங்கி வாழ்வதும்.

📌
இமாம் முஸ்லிம் ரஹிமஹுல்லா அவர்களின் ஸஹீஹில் பதிவாகியுள்ள

Part 01 lesson
1 2 3 8